முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் சிலை திறந்து வைப்பு!
சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் எற்பாட்டில் முன்னாள் உடுவில் கிராம சபைத்தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் பிரமுகருமான மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வநாதர் தர்மலிங்கம் அவர்களின் திருவுருவசிலை திறப்பு நிகழ்வு இன்று சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு அருகாமையில் திறந்துவைக்கப்பட்டது.
சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் கருணாகரன் தர்ஷன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா ஆகியோர்கள் கலந்து கொண்டு திருவுசிலையினை திறந்து வைத்தனர்.
இதில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சோ.மாவைசேனாதிராஜா, யாழ் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறுதிருமுருகன், முன்னாள் மாகாண சபையின் உறுப்பினர் பா.கஜதீபன், சுன்னாகம் வலிகாமம் தெற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.