மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு?
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் மற்றும் பெட்ரோல் ஆகிய இரண்டு இருப்பும் இல்லை என இலங்கை பெட்ரோலிய தனியார் கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் டி.வி.சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.
அத்துடன், முத்துராஜவெல பெற்றோலிய முனையத்திலிருந்து பெற்றோல், டீசல் விநியோகங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
என்ற போதும் அடுத்த இரண்டு நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
40,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசல் கப்பல் ஒன்றே இவ்வாறு நாட்டை வந்தடைய உள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 92 ரக ஒக்டேன் பெற்றோல் கப்பல் ஒன்றும் எதிர்வரும் 27 மற்றும் 29ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரவுள்ளது.
குறித்த கப்பலில் 33,000 மெற்றிக் தொன் பெட்ரோல் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.