பூமியை பற்றிய ஆய்வில் வெளியான திடுக்கிடும் தகவல் – எச்சரித்த விஞ்ஞானிகள்
பூமியின் மேற்பரப்பை விட பூமியின் உட்புறம் மெதுவாக சுழல்வதாக தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (University of Southern California) ஆய்வின் மூலம் கண்டுபிடித்துள்ளது.
இது பூமியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதால் நிலநடுக்கங்கள் அதிகரிக்கும் என்பதோடு காலநிலை மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இது மணித்தியாலம், நாட்கள் மற்றும் வாரங்களில் சிறிதளவான நீட்டிப்புகளை ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பூமியின் காந்தப்புலத்தை உருவாக்கும் திரவ வெளிப்புற மையத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு மற்றும் அடர்த்தியான பூமியின் பகுதிகளிலுள்ள பாறை மேடுகளின் ஈர்ப்பு விசையாலேயே பூமியின் உட்புறம் மெதுவாக சுழல்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அத்துடன், 2010ஆம் ஆண்டளவில் பூமியின் உட்புறம் அதன் மேற்பரப்பை விட வேகத்தை குறைக்க தொடங்கியுள்ளதாக ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
பூமிக்கு கீழ் 4,800 கி.மீ ஆழத்தில் அதிக வெப்பமும் அதிக அடர்த்தியும் நிறைந்த இரும்பு மற்றும் நிக்கல் கலந்த கோளம் ஒன்று சுழன்று கொண்டிருக்கின்றது.
பூமியின் இந்த மாற்றத்தினால் இவற்றில் பாதிப்புக்கள் ஏற்படலாம் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.