
பஸ் கட்டணங்கள் 22 வீதத்தால் இன்று(July 01) முதல் அதிகரிப்பு
இதற்கமைய, இதுவரை 32 ரூபாயாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் நள்ளிரவு முதல் 40 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் கட்டண திருத்தம் தனியார் மற்றும் அரச பஸ்களுக்கு பொருந்தும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த வருடத்தில் 4 தடவைகள் பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
எனினும், எரிபொருளின் விலையேற்றத்தினாலேயே இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்தார்.
எவ்வாறாயினும், வருடாந்தம் ஜூலை மாதம் அதிகரிக்கப்படும் பஸ் கட்டணத்தில், இம்முறை எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட 12 விடயங்கள் கவனத்தில்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.