பல்கலைகழகங்களை திறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பல்கலைகழகங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைகழகங்களை திறக்க தீர்மானித்துள்ளது.
நாட்டில் கொவிட்- 19 பாதிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்கலைக்கழகங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.