பரோட்டா அதிகமா சாப்பிறீங்களா? இந்த ஆபத்து நிச்சயம்
மைதா மாவினால் தயாரிக்கப்படும் இந்த பரோட்டாவிற்கு தற்போது முக்கியத்துவம் கொடுத்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிட்டு வருகின்னர்.
பொதுவாக அனைவரும் இந்த மைதா மாவினால் தயாரிக்கப்படும் பரோட்டாவை அதிகமாக உண்கின்றனர். இந்த பரோட்டாக்கள் அதிகளவில் சாப்பிடுவதனால் நீரிழிவு நோய் ஏற்படும்.
பரோட்டா சாப்பிடுவது தவறு இல்லை அது செய்யப்படும் மைதா மா தான் பிரச்சனை. இந்த மாவினால் பரோட்டா மட்டும் செய்வதில்லை மாலை வேளையில் தேநீருடன் எடுத்துக்கொள்ளும் பிஸ்கட், சமோசா, பகோடா, ரஸ்க், பப்ஸ் உள்ளிட்ட அனைத்திலும் மைதா உள்ளது.
தினசரி நாம் மைதாவில் செய்யப்பட்ட உணவுகளை ஏதேனும் ஒரு வகையில் எடுத்துக்கொள்கிறோம். இதனால் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரித்து அல்லோக்ஸான், சர்க்கரை நோயாளிகளின் கணையத்தை நேரடியாக பாதிக்கும்.
மைதா உணவுகள் அதிக அளவில் கொழுப்பு மற்றும் எண்ணெய் கொண்டவை. பரோட்டா, சோலே பட்டூரா, பிஸ்கட்டுகள், பலகாரங்கள் ஆகியவற்றில் கூடுதல் எண்ணெய், இனிப்பு சேர்க்கப்பட்டிருக்கும்.
இதனால் ஆரோக்கியமற்ற முறையில் உடல் எடை அதிகமாகும். மைதாவில் இருக்கும் மற்றைய உணவுகளை விட மக்களிடையே அதிகளவில் உண்பது இந்த பரோட்டா தான் பரோ சுவையாக இருந்தாலும் அதன் பின்விளைவு மிகவும் மோசமாக இருக்கும்.
எனவே பரோட்டாவை அதிகளவில் உண்ணக்கூடாது. அதை மீறி உண்பதால் அது உயிரையே கொஞ்சம் கொஞ்சமாக காவு வாங்கும்.