படகு மூலம் வெளிநாடு செல்ல முயன்ற 12 பேர் யாழ்ப்பாணத்தில் கைது
சட்டத்துக்குப் புறம்பாக படகு மூலம் வெளிநாடு செல்ல முற்பட்ட 12 மற்றும் படகு உரிமையாளரும் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு மணற்காடு கடற்கரைக்கு அண்மையாக உள்ள வீடொன்றில் வைத்து இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
8 ஆண்களும் 4 பெண்களுமே சட்டத்துக்குப் புறம்பாக வெளிநாடு செல்ல முற்பட்டனர் என்று குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றும் பொலிஸார் கூறினர்.