நியூயார்க் நகரில் திடீர் வெள்ளப்பெருக்கு அவசரகாலநிலை பிரகடனம்
நகரின் பல சுரங்கப்பாதை அமைப்புகள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.நியூயோர்க் நகரில் பலத்த வெள்ளப்பெருக்கை ஏற்பட்டுள்ளதால் அங்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நகரின் பல சுரங்கப்பாதை அமைப்புகள், தெருக்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.இதனால் லாகார்டியா விமான நிலையத்தில் பயணகள் முனையமும் மூடப்பட்டுள்ளது.
நகரின் சில பகுதிகளில் 20cm வரை வெள்ளம் வழிந்தோடுகிறது.”இது உயிருக்கு ஆபத்தான புயல் வெள்ளம்” என நியூயோர்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் கூறியுள்ளார்.
“நியூயார்க் நகரம், லாங் ஐலேண்ட் மற்றும் ஹட்சன் தாழ்நிலப்பகுதிகள் முழுவதும் அவசரகால நிலையைப் பிரகடனம் செய்கிறேன்.பிராந்தியம் முழுவதும் கடும் மழை காரணமாக எவ்வாறு அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது“ என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பாதுகாப்பாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளம் நிறைந்த சாலைகளில் பயணிக்க முயற்சிக்க வேண்டாம் என ஆளுநர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.வெள்ளப்பெருக்கால் உயிரிழப்புகள் அல்லது உயிர் ஆபத்தான காயங்கள் எதுவும் பதிவாகவில்லை.
அத்துடன், நியூயார்க் நகரத்திலிருந்து ஹட்சன் ஆற்றின் குறுக்கே உள்ள நியூ ஜெர்சி நகரமான ஹோபோக்கனிலும் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.