நலன்புரி கொடுப்பனவு திட்டத்தை இடைநிறுத்துமாறு கோரிக்கை
நலன்புரி கொடுப்பனவு திட்டத்தை இடைநிறுத்துமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர். நலன்புரி கொடுப்பனவு திட்டத்தை இடைநிறுத்துமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வறிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் அஸ்வெசும எனும் நலன்புரி திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நலன்புரி திட்டத்தின் மூலம் கொடுப்பனவு வழங்குவதனை தற்காலிக அடிப்படையில் இடைநிறுத்துமாறு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரியுள்ளனர். இது தொடர்பிலான விசேட எழுத்து மூல கோரிக்கை விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கொடுப்பனவு திட்டத்தின் போது அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கும் நோக்கில் இவ்வாறு நலன் குறித்த திட்டத்தை ஒத்திவைக்குமாறு கோரப்படுகிறது.
நலன்புரி திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கும் யோசனைக்கு ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 52 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.
ஆளும் கட்சியின் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்று எதிர்க் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இந்த கோரிக்கையில் கையொப்பம் இட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தில் வருமானம் குறைந்தவர்களுக்கு உரிய முன்னுரிமை வழங்கப்படவில்லை என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த கொடுப்பனவை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.