Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

தொப்பை கொழுப்பை குறைக்கும் 8 அற்புத பானங்கள்

மெட்டாபாலிசம் என்பது, நாம் உண்ணும் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடலுக்கு தேவையான ஆற்றலாக மாற்றும் இரசாயன மாற்றத்தை குறித்து நிற்கிறது.

இந்த செயல்பாடு, உடல் கலோரிகளை எரிக்கும் வேலையைச் செய்யும். இதற்கு நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளும் சில ஆரோக்கியமான பானங்களும் உதவுகின்றன.அதனால் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்பட்டு உடல் எடையையும் சீராக வைத்திருக்க உதவும்.இப்பதிவின் ஊடாக மெட்டாபாலிசத்தை எனது உடலில் அதிகரிக்க செய்யும் எணவு வகைகள் குறித்து அறிந்துக்கொள்வோம்.கிரீன் டீ​க்ரீன் டீயில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் தன்மை அதிகம். இதிலுள்ள கேட்டசின் என்னும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்து கலோரிகளை எரிக்க உதவி செய்கிறது.அதனால் தினமும் க்ரீன் டீ அடிக்கடி குடிக்கும் பழக்கம் இருந்தால் உங்களுக்கு எடை குறைதல் மிக வேகமாக நடக்கும்.பிளாக் காபிகாபி யாருக்குதான் பிடிக்காது. காலையில் எழுந்ததும் நாம் குடிக்கும் முதல் பானமே அதுதான்.ஆனால் காபியில் பால் சேர்த்து குடிக்காமல் பிளாக் காபியாக (சர்க்கரையும் சேர்க்காமல்) குடிப்பது நம்முடைய உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.மெட்டபாலிசத்தையும் அதிகரிப்பதோடு உடலுக்குத் தேவையான எனர்ஜியையும் கொடுக்கிறது.அதனால் பிளாக் காபியில் சிறிது இலவங்கப்பட்டை பொடி அல்லது தேங்காய் எண்ணெய் சேர்த்து குடித்து வர மெட்டபாலிசமும் அதிகரிக்கும். உடல் எடையும் குறையும்.மூலிகை குடிநீர்நம்முடைய உணவுகளில் சுவைகளை அதிகரிக்க நாம் பட்டை, சோம்பு கிராம்பு, ஏலக்காய் போன்ற மசாலா பொருள்களை பயன்படுத்துகிறோம்.ஆனால் அந்த மசாலாக்கள் நம்முடைய உடலின் வெப்பநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்கவும் உதவி செய்கிறது.இந்த மசாலாக்கள் பசியைக் கட்டுப்படுத்தி கலோரிகளின் அளவைக் குறைப்பதோடு மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கச் செய்து உடல் எடையை வேகமாகக் குறைக்க உதவி செய்கிறது.சிட்ரஸ் பழ சாறுகள்உடல் எடையைக் குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பலரும் காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பதை பழக்கமாக வைத்திருப்பார்கள்.ஆனால் எலுமிச்சை பழம் மட்டுமின்றி வைட்டமின் சி அதிகமுள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, கிரேப் ஃப்ரூட் ஆகிய அனைத்துமே உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை தான்.வைட்டமின் சி நம்முடைய உடலுக்குத் தேவையான அடிப்படையான ஊட்டச்சத்தும் கூட. அதோடு கொழுப்புகளை எரித்து, உடலில் உண்டாகும் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தையும் குறைக்கச் செய்கிறது.இதனால் தேவையில்லாத கொழுப்புகள் எரிக்கப்பட்டு உடல் எடை குறைகிறது.​புரோட்டீன் ஸ்மூத்திகள்​புரோட்டீன் ஸ்மூத்திகள் புரதம் நம்முடைய உடலின் இயக்கத்துக்குத் தேவையான அவசியமான, அடிப்படையான ஊட்டச்சத்து ஆகும்.இந்த புரதச்சத்து தான் தசைகளின் வளர்ச்சியை மேம்படுத்தவும் சாப்பிட்ட திருப்தியையும் திசுக்களில் ஏற்படும் சேதத்தை ரிப்பேர் செய்யவும் உதவி செய்கிறது.அதோடு நம்முடைய உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சிக் கொள்ளவும் ஜீரணத்தை மேம்படுத்துவதற்கான ஆற்றலைக் கொடுக்கவும் இந்த புரதச்சத்துக்கள் உதவி செய்கின்றன.காலையில் முதல் உணவாக புரதங்கள் நிறைந்த ஸ்மூத்தியை எடுத்துக் கொள்ளும்போது வயிறு நிரம்பிய உணர்வும் கிடைக்கும்.கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்வதையும் தவிர்க்கலாம். இவை மெட்டபாலிசத்தை தூண்டி உடல் எடை இழப்புக்கும் உதவி செய்யும்.குறிப்பாக காலையில் ப்ரோ – பயோடிக் நிறைந்த யோகர்ட், தாவர மூலங்களில் இருந்து தயாரித்த புரோட்டீன் பவுடர் (சோயா, பாதாம், ஓட்ஸ்) ஆகியவற்றுடன் காய்கறிகள் மற்றும் பழங்கள் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தைப் பின்பற்றலாம்.​இளநீர், தேங்காய் தண்ணீர்உடலை அதிக நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்ள இளநீர் மிகச்சிறந்த பானமாக இருக்கும்.இளநீரில் உள்ள இயற்கையான எலக்ட்ரோலைட்டுகள் உடலுக்குப் புத்துணர்ச்சியைக் கொடுக்கும். உடலின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்கவும் ஆரோக்கியமான மெட்டபாலிசத்துக்கும் தேங்காய் தண்ணீர் உதவி செய்யும்.அதிலும் உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படும் ஆற்றல் இழப்பை சரிசெய்ய இளநீர் உதவி செய்யும். உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும் அதன்மூலம் உடல் எடையைக் குறைக்கவும் இளநீர் உதவும்.​ஐஸ் ஹெர்பல் டீமூலிகைகள் சேர்க்கப்பட்ட ஹெர்பல் டீ வகைகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவி செய்யும்.குறிப்பாக பல்வேறு மூலிகைகள் சேர்க்கப்பட்ட ஹெர்பல் டீ உடலின் ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உடல் எடையைக் குறைக்கவும் உதவி செய்யும்.அதிலும் கெமோமில் டீ, பெப்பர்மிண்ட் டீ, புதினா டீ ஆகியவை உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்பை எரித்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்யும்.எடையும் குறையும்.​ஹைட்ரேட்டிங் வாட்டர்வெறும் தண்ணீர் மட்டும் குடிப்பதன் மூலம் உடலில் நீர்ச்சத்து உண்டாகும் தான். அதோடு புதினா, வெள்ளரிக்காய், எலுமிச்சை துண்டுகள், இஞ்சி என மூலிகைகளை தண்ணீருக்குள் போட்டு வைத்துக் குடிப்பதன் மூலம் நீர்ச்சத்தோடு சேர்த்து அந்த பொருள்களில் உள்ள மினரல்களும் சேர்த்து நமக்குக் கிடைக்கும்.நீர்ச்சத்து குறைபாடு உடலில் ஏற்பட்டால் மெட்டபாலிசத்தின் வேகமும் குறையும்.அதனால் எடை குறைவது சிரமமாகி விடும். அதனால் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்து உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும் எடையை வேகமாகக் குறைக்கவும் இந்த தண்ணீர் உதவி செய்யும்.

Back to top button