தினமும் ஒரு கொய்யா பழம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
கொய்யா பழத்தில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்றவை நிறைந்துள்ளது, என்பது எல்லோரும்அறிந்த ஒரு விடயம்மே.
இந்த பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, கால்சியம், இரும்பு, மக்னீசியம் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது. அந்த வகையில் நூறு கிராம் கொய்யா பழத்தில் சுமார் 300 மில்லிகிராம் வைட்டமின் சி சத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே இந்த கொய்யா பழம் பல வகையான உடல்நலப் பிரச்சனைகளை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அப்படிப்பட்ட இந்த கொய்யா பழத்தை தினமும் ஒன்று சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்ப்போம். கொய்யா உங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். குறிப்பாக இதன் இலையின் சாறு இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது, மேலும் இவை இன்சுலின் எதிர்ப்பு கொண்டுள்ளது.கொய்யா பழம் நார்ச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகும். எனவே தினமும் நீங்கள் கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் குடல் இயக்கத்தை ஊக்குவிக்கலாம், மேலும் மலச்சிக்கலைத் தடுக்கலாம்.
பெண்களுக்கு மாதவிடாய் அறிகுறிகளை உள்ளடக்கிய டிஸ்மெனோரியா ஒரு பொதுவான நிகழ்வாகும். இருப்பினும், கொய்யா இலைச் சாறு மாதவிடாய் வலியின் குறைக்க உதவும்.கொய்யா பழத்தை போலவே அவற்றில் இலைகளிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதன் இலை புற்று நோய் எதிர்ப்புப் பண்புகள் கொண்டுள்ளது. எனவே கொய்யா சாறு புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவும்.இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பல கூற்றுகள் கொய்யா பழத்தில் உள்ளன.
கொய்யா இலைகளில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளதால் இவை இதயத்தை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் தீங்குகளிலிருந்து பாதுகாக்க உதவும்.கொய்யாப்பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம். ஏனெனில் கொய்யா பழத்தில் 37 கலோரிகள் உள்ளது மற்றும் உங்கள் தினசரி நார்ச்சத்து உட்கொள்ளலில் 12% மட்டுமே கொண்ட குறைந்த கலோரி சிற்றுண்டி ஆகும்.
தினம் ஒரு கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் வாயு மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுப்படலாம். ஏனெனில் கொய்யா பழம் அமில தன்மை நீக்க உதவும். எனவே, கொய்யா பழத்தை சாப்பிட்டால் வாயுவை வெளியேற்றுவது எளிதாகும்.