
சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு
12.5 கிலோகிராம் எடையுள்ள லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 80 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி, கொழும்பில் 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4 ஆயிரத்து 360 ரூபாயகும். ஏனைய மாவட்டங்களில் போக்குவரத்துக் கட்டணத்துடன் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 5 கிலோ கிராம் எரிவாயு சிரிண்டரின் விலை 30 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பில் அதன் புதிய விலை ஆயிரத்து 750 ரூபாயாகும்.