
சமுர்த்தி பெறுனர்களுக்கான முக்கிய அறிவித்தல்
அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்ட சமுர்த்தி பெறுனர்களுக்கு தொடர்ந்தும் சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே அமைச்சரவை இதற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்ததிற்காக 393,094 சமுர்த்தி பெறுனர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.