
கோட்டாபய ராஜபக்ச இன்று மாலை தாய்லாந்தை சென்றடைந்தார்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று மாலை தாய்லாந்தை சென்றடைந்தார். அவர் சிங்கப்பூர் செலிடார் விமான நிலையத்தில் இருந்து வாடகை விமானம் மூலம் பாங்கொக் நேரப்படி இரவு 8 மணியளவில் டான் முயாங் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.