fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

காதல் தோல்வியை சந்தித்தவரா நீங்க? அப்போ இந்த வாழ்க்கை பாடங்களை கற்றிருப்பீர்கள்…

பொதுவாகவே எல்லா உயிர்களுக்கும் அடிப்படை தேவை அன்பு தான். அதனை அடிப்படையாக வைத்து தான் இந்த உலகம் இயங்குகின்றது என்றால் மிகையாகாது.

குறிப்பாக மனிதர்கள் அன்புக்காகவும் பாசத்துக்காகவும் அதிகமாக ஏங்குகின்றார்கள் என்பது உளவியல் ரீதியான உண்மை. அதனால் தான் மனிதர்கள் மத்தியில் காதல் உணர்வு தவிர்க்க முடியாத விடயமாக இருக்கின்றது. இந்த உலகத்தில் மிக மிக பழைய உணர்வும் காதல் தான். மிக மிக புதிய உணர்வும் காதல் தான்.இது யாருக்கு யார் மீது எந்த சமயத்தில் ஏற்படும் என்பதை யாராலும் கணிக்கவே முடியாது. ஒரு மந்திரம் போல் வாழ்வில் நிகழ்ந்துவிடுகின்றது.

அப்படி யாரின் மீது காதல் உணர்வு ஏற்படுகின்றதோ அவர்களை மனம் அதிகமாக நம்ப ஆரம்பித்துவிடும். வாழ்க்கை முழுவதும் இந்த உறவு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். பின்னர் இந்த உறவு இல்லாவிட்டால் வாழ்வில் எதுவும் இல்லை என்பது போன்ற உணர்வு தானகவே ஏற்படுகின்றது.

இப்படி வாழ்க்கை முழுவதும் ஒருவர் கூட இருக்க போகின்றார் என்பதை மனம் உணர்ந்த பின்னர் அந்த மனம் அந்த உறவில் தங்கிவாழ ஆரம்பித்துவிடுகின்றது. இந்த உறவில் திடீரென ஒரு விரிசல் ஏற்படும் போது அதை மனம் இலகுவில் தாங்கிக்ககொள்ள முடியாத நிலை உருவாகும். 

காதல் உறவில் ஏற்படும் பிரிவை நிச்சயம் யாராலும் இலகுவாக கடக்க முடியாது. ஆனால் காதல் தோல்வியை ஒருமுறை சந்தித்துவிட்டால் மன ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் அது உங்களுக்கு பல வாழ்க்கை பாடங்களை கற்றுக்கொடுக்கும் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

காதல் தோல்வி கற்றுக்கொடுக்கும் முதல் மற்றும் முக்கிய பாடம் என்னவென்றால், மனிதவர்கள் மாறக்கூடியவர்கள்.

காலம் செல்ல செல்ல ஒருவரின் செயல்களும், பழக்கவழக்கமும், முடிவுகளும் நிச்சயம் மாறுதல்களுக்கு உள்ளாகும்.

இது இயற்கையின் நியதி என்பது புரியும். அதன் பின்னர் மனிர்களின் மாற்றங்கள் உங்கள் மனநிலையை பாதிக்காது.

வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள் யாரும் இறுதிவரை கூட வரமாட்டார்கள் எனும் உண்மையை காதல் தோல்வி சிறப்பாக கற்றுக்கொடுத்துவிடும்.

எதற்கும் ஜாக்கிரதையாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்ற பக்குவம் உங்களுக்கு வந்துவிடும்.

காதல் தோல்வி கற்றுக்கொடுக்கும் அடுத்த பாடம் தான் தனிமை. தனியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை.

தனியாக வாழ்வதை சமூகம் ஆதரிக்காது என்ற பிரம்மை நமது மனதுக்குள் இயல்பாகவே இருக்கும். உங்களை பற்றிய அக்கறை உங்களுக்கு மட்டும் தான் இருக்கின்றது என்பதை காதல் தோல்வி புரியவைத்துவிடும். தனிமை எவ்வளவு அழகானது என்பதை உணர்வீர்கள்.

காதல் தோல்வி ஏற்படும் போது உங்களுக்கு மற்றவர்கள் மீது இருக்கும் நம்பிக்கை உடைந்துவிடும். எனவே தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உங்களை நீங்கள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற உண்மை புரியும். வாழ்வில் எது முக்கியம் என்பதை உணர்ந்து செயற்பட ஆரம்பித்துவிடுவீர்கள்.

Back to top button