கனேடிய மக்களுக்கு வழங்கப்படவுள்ள சலுகை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கனேடிய (Canada) மக்களுக்கு எரிபொருள் வரிச் சலுகை வழங்கப்பட வேண்டுமென அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் பியோ பொலியேவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல், லிபரல் அரசாங்கத்தின் வரிக் கொள்கை குறித்து அவர் கேள்வி எழுப்பி வருகின்ற நிலையில் மத்திய அரசாங்கத்தின் எரிபொருள் கட்டணங்கள் தொடர்பில் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மத்திய அரசாங்கத்தினால் அறவீடு செய்யப்படும் கார்பன் வரி நீக்கம் செய்ய வேண்டும். குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களுக்கு இவ்வாறு வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும்.
கனேடிய மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும் விடுமுறையை கழிப்பதற்கு முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்தக் கோடைக் காலத்தில் எரிபொருளுக்கு வரிச் சலுகை அரசாங்கம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.