கணவன் தாக்கியதில் மனைவி மரணம்
கொஸ்வத்தை, மஹயயவத்தை பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இரும்பு கம்பியால் தாக்கப்பட்டதில் 38 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் கொஸ்வத்தை பொலிஸாரால் அவரது வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கஹடவில பொதுவடவன பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக குறித்த பெண்ணின் கணவர் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணம் தொடர்பான நீதவான் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
47 வயதுடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகளை கொஸ்வத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.