
எரிபொருள் விலை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டில் உள்ள அனைத்து எரிபொருள் நிறுவனங்களுக்குமான பொதுவான எரிபொருள் விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் முதல் விலை சூத்திரத்தின் கீழ் இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் உட்பட அனைத்து எரிபொருள் நிறுவனங்களுக்குமான அதிகபட்ச சில்லறை விலை, அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ், அந்த நிறுவனத்தின் முதல் இரண்டு எரிபொருள் கப்பல்கள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, எரிபொருள் தாங்கிய இரண்டு கப்பல்களும் எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.