உடல் எடையைக் குறைக்க நினைக்கின்றீர்களா? ப்ரோக்கோலியால் நிகழும் அற்புதம்
நார்ச்சத்து அதிகம் கொண்ட ப்ராக்கோலியின் ஆரோக்கிய நன்மையைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
காலிபிளவர் வகைகளில் ஒன்றான ப்ராக்கோலியில் சத்துக்கள் அதிகம் உள்ளது. இதில் செம்பு, இரும்பு, துத்தநாகம், வைட்டமின்கள் ஏ மற்றும் சி, மற்றும் பி வைட்டமின்கள் தவிர வைட்டமின் கே, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் உள்ளது.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இதனை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம். கெட்ட கொழுப்பினை குறைப்பதற்கு உதவியாக இருக்கின்றது.
எலும்பு உருவாக்கம் மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பைத் தடுப்பதற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது. மேலும் மூளைவளர்ச்சி மற்றும் நரம்பு திசு செயல்பாடுகளை மேம்படுத்துகின்றது.
ப்ரோக்கோலி இயற்கையாகவேயே புற்றுநோய் தடுப்புடன் இணைக்கப்பட்ட சேர்மங்கள் உள்ளன. இந்த சேர்மங்களில் புற்றுநோய்களை நடுநிலையாக்குவதற்கும் புற்றுநோய் செல்கள் வளர்வதையும், பரவுவதையும் தடுக்கும் திறன் உள்ளது.
செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நோயினால் ஏற்படும் அழற்சியை எதிர்த்து போராடவும் உதவுகின்றது.