
ஈரான் முன்னெடுத்துள்ள புதிய நகர்வு: எழுந்துள்ள கண்டனம்
ஈரான் (Iran) முன்னெடுத்துள்ள புதிய நகர்வுக்கு பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் அதன் அணுசக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாக வெளியான தகவலை அடுத்தே குறித்த நாடுகள் கண்டனம் வெளியிட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் தங்களது Fordow மற்றும் Natanz ஆகிய இரண்டு தளங்களிலும் ஆயிரக்கணக்கான மையவிலக்குகளை நிறுவுவதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், Natanz செறிவூட்டல் தளத்தில் அதிகளவான மையவிலக்குகளை இயக்கவும் முடிவு செய்துள்ளது.
ஈரானின் இந்த முடிவானது அதன் அணுசக்தி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் செயல் எனவும், இது குறிப்பிடத்தக்க அபாயத்தை உருவாக்கும் என்றும் கூட்டறிக்கை ஒன்றில் பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா நாடுகள் குறிப்பிட்டுள்ளன.
மேலும், அதன் உற்பத்தி திறனை கணிசமாக அதிகரிப்பதற்கான ஈரானின் முடிவு குறிப்பாக கவலை அளிக்கிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.