
இன்று மின்வெட்டு இல்லை
இன்றும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் (14) மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நாளை பௌர்ணமி தினம் என்பதால் இவ்வாறு மின்வெட்டை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.
மேலும், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என அவர் குறிப்பிட்டார்.