இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு கொரோனா!
இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை வெளியிட்ட தகவல்களின் படி இன்றைய திகதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 198,000 ஐ நெருங்கியுள்ளது. இதுவரை 5600 மரணமடைந்துள்ளனர்.
ஒரு லட்சம் பேர் இன்னமும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இன்றைய தினம் புதிதாக 8400 பேருக்கு காரோண நோய்த்தொற்று இனம்காணப்பட்டுள்ளது. ஒரு நாளில் கண்டுபிடிக்கப்பட்ட உச்ச எண்ணிக்கை இதுவாகும்.
இந்நிலையில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை அமுலில் இருக்கும் என மத்திய உள்துறை அமைச்சு கூறியுள்ளது.