இந்த விடயத்தில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுவது ஏன்? மருத்துவ ரீதியிலான விளக்கம்
பொதுவாக மனக்கவலை கோளாறுகள் அனைவருக்கும் இருக்கும்.
ஆனால் ஆண்களை விட பெண்களே மனக்கவலை பிரச்சினையால் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள் என ஆய்வுகள் கூறுகின்றன.
இது தொடர்பான பல ஆய்வுகள் செய்யப்பட்டு பெண்களின் இந்த நிலைக்கு சில காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் மனக்கவலை பிரச்சினையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு அப்படி என்ன நடக்கிறது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. உடலில் ஆண்களை விட பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள் மாறுப்பட்டதாக இருக்கும். இது போன்ற காலங்களில் அவர்கள் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள். உதாரணமாக மாதவிடாய் காலத்தை கூறலாம்.
2. பெண்களின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டெரோன் என்னும் இரண்டு முக்கிய ஹார்மோன்கள் உள்ளன. இது மூளையில் வித்தியாசமான வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தும். இதனால் ஆண்களை விட பெண் மனக்கவலை பிரச்சனையால் பாதிக்கப்படுகிறார்கள்.
3. ஆண்களை போல் பெண்களும் மன அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்படுவார்கள். ஆனால் பெண்கள் மன அழுத்தம் ஏற்படும் போது அதனை வெளியில் கூற மாட்டார்கள். மாறாக மனத்திற்குள்ளேயே வைத்துக் கொண்டு எதிர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்வார்கள்.
4. வேதியல் மாற்றங்கள் எனப் பார்க்கும் பொழுது அது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக இருக்கும். இவை நபருக்கு நபர் வேறுப்படும். இதுவும் பெண்களுக்கு அதிகளவு மனக்கவலை ஏற்பட காரணமாக உள்ளது.
5. பாலியல் அச்சுறுத்தல்களுக்கு பெண்கள் அதிகமாக முகங் கொடுக்கிறார்கள். இதுவும் பெண்களுக்கு மனதளவில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அத்துடன் சிறு வயதில் சந்தித்த கொடுமைகள், அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் உள்ளிட்டவைகள் கூட மனக்கவலையை ஏற்படுத்த காரணமாக இருக்கலாம்.