fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

அரச ஊழியர்கள் சம்பளம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

அரச ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பளத்தில் பாதியே வழங்கப்படும் என வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளமே வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு நபர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவும் பத்தேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தில் பாதியை மாத்திரம் வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சில தரப்பினர் இவ்வாறு கருத்து வெளியிடுவது தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க ஊழியர்களுக்கு திட்டமிட்டபடி சம்பளம் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Back to top button