அரச அதிகாரிகளுக்கு கிடைக்கும் சம்பளம் போதுமானது – அமைச்சர்
நாட்டிற்கே பெரும் சுமையாகக் காணப்படும் அரச ஊழியர்களுக்குப் போதுமான அளவு சம்பளம் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு எந்தக் கஸ்டமும் இல்லை இதனை அவர்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் அரச ஊழியர்களுக்குச் சம்பளம் காணாது அவர்களுக்குச் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட வேண்டும் எனக் கூறி தொழிற் சங்கங்களே தமது சுயநோக்கங்களுக்காகப் பொய்யுரைக்கின்றன என அமைச்சர் பந்துள குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தற்போதய இக்கட்டான நிலையிலும் அரச ஊழியர்களுக்கான சம்பளம் நிறுத்தப்படாது அவர்களுக்கே அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டு பெருந்தொகைச் சம்பளம் வழங்கப்பட்டு வருகின்றது. நாட்டிலுள்ள அரச ஊழியர்கள் நாட்டிற்குப் பெரும் சுமையாகக் காணப்படுகின்றனர்.
பொருட்களின் விலையேற்றத்தால் அரச ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றார்கள், அரச ஊழியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள் அவர்களுக்குச் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், வங்கிக் கடன்களில் சலுகை வழங்கப்பட வேண்டும் என சில தொழிற்சங்கங்களே தமது அரசியல் நோக்கங்களுக்காகப் பொய்யுரைத்து வருகின்றன.
அரச ஊழியர்களுக்குப் பெருந்தொகைப் பணம் சம்பளமாகக் கிடைக்கின்றது. அதை வைத்து அவர்கள் நல்ல வாழ்க்கை வாழுகின்றார்கள், மற்றும் வங்கிக் கடன்கள் மீது எவ்வித சலுகைகளும் வழங்கப்படமாட்டாது. வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொண்ட அரச ஊழியர்கள் அதனை முதலிட்டு அதிலிருந்தே அவர்கள் மாதாந்தம் அதிகளவான வருமானத்தைப் பெற்று வருகின்றார்கள். அவர்களுக்கு எவ்வித குறையுமில்லை என்றார்.