திருமண உறவில் அதிக காதலை வெளிப்படுத்தும் ராசிகள்!
வாழ்க்கையில் பணம், சொகுசு வாழ்க்கையை விட முக்கியமானது அன்பான, பாசமான, நம் மேல் அக்கறை கொண்ட துணை தான். நம்மீது அதீத அன்பை செலுத்துபவர்கள் தாய், தந்தையை அடுத்து துணை மட்டுமே. அப்படி வரம்பு கடந்த அன்பைப் பொழிபவர்கள் சிலர் தான். யார் ஒருவருக்கு அன்பான துணை கிடைக்கிறதோ அவரின் வாழ்வு சொர்க்கமாகத் தோன்றும்.ஜோதிடத்தின்படி எந்த ராசி, லக்கினத்தைச் சேர்ந்தவர்கள் அன்பை வாரி வழங்கக்கூடியவர்கள் என்பதை விரிவாக பார்ப்போம்.
வாழ்க்கையில் பணம், சொகுசு வாழ்க்கையை விட முக்கியமானது அன்பான, பாசமான, நம் மேல் அக்கறை கொண்ட துணை தான். நம்மீது அதீத அன்பை செலுத்துபவர்கள் தாய், தந்தையை அடுத்து துணை மட்டுமே. அப்படி வரம்பு கடந்த அன்பைப் பொழிபவர்கள் சிலர் தான். யார் ஒருவருக்கு அன்பான துணை கிடைக்கிறதோ அவரின் வாழ்வு சொர்க்கமாகத் தோன்றும்.
ஜோதிடத்தின்படி எந்த ராசி, லக்கினத்தைச் சேர்ந்தவர்கள் அன்பை வாரி வழங்கக்கூடியவர்கள் என்பதை விரிவாக பார்ப்போம்.
மிதுனம்
மிதுன ராசியினர் தானும், தன்னை சுற்றியுள்ளவர்களும் உல்லாசமாக, இன்பத்தோடு வாழ வேண்டும் என நினைக்கக்கூடியவர்கள். இவர்களை காதலிக்கும் போது இவர்களின் இதயப்பூர்வமான காதலும், அன்பும் புரியும். மிதுன ராசியினர் தன் துணையை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார்கள்.
தன்னை சுற்றியுள்ளவர்கள், கூட்டாளிகள், துணை என எல்லோரிடமும் அன்பை காட்டுவார்கள். பெரும்பாலும் இவர்கள் திருமண பந்தத்தை பெரிதும் நேசிப்பார்கள்.
கடகம்
கடக ராசியை சேர்ந்தவர்கள் தாங்கள் காதலிக்கும் நபர்களை முதலில் முழுவதும் புரிந்து கொள்ளத் தொடங்குகிறார்கள். இதனால் இருவரிடையே எந்த ஒரு பிரச்னையும் பெரியளவில் ஏற்படாது. தங்களின் துணையை உணர்வுப்பூர்வமாக நேசிப்பார்கள். இவர்களுடன் ஒரு முறை இணைந்துவிட்டால் இவர்களை விட்டு பிரிய மாட்டார்கள். பிரிய மனமிருக்காது. அப்படிப்பட்டவர்கள் தங்களின் காதலில் நேர்மையாக செயல்படுவதால் இவர்களின் துணை மிகவும் இவர்களை விரும்பக்கூடியவராக இருப்பார்கள்.
கன்னி
கன்னி ராசி மக்களை எளிதில் யாரும் காதலிக்க மாட்டார்கள். ஆனால் இவர்களை புரிந்து கொண்டு இவர்களை காதலிக்கத் தொடங்கிவிட்டால், வரம்புகளைக் கடந்து இவர்கள் மீது காதலைப் பொழியக் கூடியவர்களாக இவர்களின் துணை மாறிவிடுவார்கள். காதலிப்பவர்கள், தங்களின் காதலை குடும்ப உறுப்பினர்களுடன் எடுத்துரைத்து காதல் திருமணத்திற்கு எளிதில் அனுமதி வாங்கிவிடுவார்கள்.
இவர்கள் தங்களின் அன்புக்குரியவர்களுடன் நேரத்தை செலவிட விரும்புவார்கள். தன் துணையின் அன்பைப் பெறுவதோடு, இவர்கள் செய்ய விரும்பும் செயலை அல்லது இலக்கை துணையுடன் சேர்ந்து அடைய முயல்வார்கள்.
கும்பம்
இந்த ராசியினர் தங்களின் துணை மீது உணர்வு பூர்வமாக இணைந்திருப்பதை உணர்கிறார்கள். இவர்கள் தங்களின் துணையிடம் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ள விரும்புவார்கள். அதே சமயம் தன் துணையின் உணர்வுகளையும், கருத்துக்களையும் கேட்டறிவார்கள் என்பதால் இருவரிடையே மனம் ஒத்துப் போகும்.
இவர்கள் யாரையும் சார்ந்து இருப்பதை விரும்புவதில்லை, ஆனால் அவர்கள் பல விஷயங்களுக்காக தங்கள் அன்பானவரை சார்ந்து இருக்கிறார்கள். இவர்கள் தங்கள் துணையின் காதலை பெற எந்த ஒரு தடைகளையும் உடைத்தெறிவார்கள்.
மீனம்
நீர் ராசியான மீன ராசியினர் மிகவும் விவேகமானவர்களாகக் கருதப்படுகிறார்கள், இவர்கள் ஒருவரை காதலிக்கும்போது, காதலிப்பவரின் மனதை கவர்வதற்காகச் சிந்திக்கத் தொடங்குவார்கள். உங்கள் துணையை புரிந்து கொள்ள முழு முயற்சி எடுக்கக்கூடியவர்கள். இவர்கள் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகக் கருதப்பட்டாலும், மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.