
குளத்தில் குளிக்க சென்ற இளைஞர் பலி!
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மரப்பாலம் குளத்தில் நீராடச்சென்ற இளைஞர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய அன்ரன்ராஜ் விதுசன் என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சுவிஸ் கிராமத்தில் இருந்து மரப்பாலத்திலுள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்ற இளைஞர், நேற்று மாலை மரப்பாலம் குளத்தில் குளிக்கச்சென்ற வேளை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைகளுக்காக உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.