fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

தகாத உறவு காரணமாக இளம்பெண் கொலை!

அட்டன், கினிகத்தேன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகமுவ – மாபத்தன பகுதியில் இளம் தாயொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

28 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மாலிகா பிரியதர்ஷினி என்பவரே, அவரின் கணவரால் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண்ணுக்கு மற்றுமொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததை அடிப்படையாக வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி மாலையே இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் மறுநாள் 27 ஆம் திகதி மாலை குறித்த பெண்ணின் கணவர், தாமாகவே முன்வந்து கினிகத்தேனை பொலிஸில் சரணமடைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், ஸ்தல விசாரணையை மேற்கொண்டனர். நீதவான் பரிசோதனையின் பின்னர் சடலம் நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு எடுத்துசெல்லப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும்.

இக்கொலைச்சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸாரும், மற்றும் அட்டன் கைரேகை பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button