ராணுவத்தில் முதலாம் உலகப்போர் கால கையெறி குண்டுகள் மாற்றம் ; பயன்பாட்டுக்கு வந்தது நவீன கையெறி குண்டுகள்!
இந்திய ராணுவம் பயன்படுத்தும் முதலாம் உலகப்போர் கால கையெறி குண்டுகளுக்குப் பதிலாக, நவீன தொழில்நுட்பத்தில் முழுக்க முழுக்க இந்தியாவில், தனியார் துறையில் தயாரான கையெறிகுண்டுகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
நாக்பூரில் உள்ள எகனாமிக் எக்ஸ்புளோசிவ்ஸ் லிமிட்டெட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள இந்த கையெறி குண்டுகளை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வழங்கும் நிகழ்ச்சி நாக்பூர் அருகே நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜ்நாத் சிங்,இந்தியாவில் முதன்முதலாக தனியார் நிறுவனம் வெடிகுண்டுகளை ராணுவத்திற்காக தயாரித்துள்ளதாக கூறினார்.இது வரை இந்த நிறுவனம் ஒரு லட்சம் கையெறி குண்டுகளை ராணுவத்திற்கு வழங்கி உள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் ராணுவம் மற்றும் விமானப்படைக்கு 10 லட்சம் கையெறி குண்டுகளை வழங்கவும் பாதுகாப்பு அமைச்சகத்துடன் இந்த நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.