fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

திமிங்கலத்தின் வாயில் சென்று விட்டு உயிருடன் திரும்பிய மனிதர்.. ஆச்சரிய சம்பவம்..!

அமெரிக்காவில் பிரம்மாண்ட திமிங்கலம் ஒன்று கடலில் லோப்ஸ்டர் இறாலை பிடித்துக் கொண்டிருந்த நபரை விழுங்கி பின் உயிருடன் வெளியே துப்பிய நிகழ்வு பரபரப்பாக பேசப்படுகிறது.

மசாசூசெட்ஸ்-ன் கேப் காட் (Cape Cod, Massachusetts) கடலில் மைக்கேல் பக்கார்ட் (Michael Packard) என்ற 56 வயது நபர் கடலுக்குள் 45 அடி ஆழத்தில், ஆக்சிஜன் கருவிகளுடன் லோப்ஸ்டர்களை பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென அவரை அந்த திமிங்கலம் விழுங்கியது. சுறாவால் தாக்கப்பட்டோமா என அவர் நினைத்த வேளையில், தம்மை பிடித்த விலங்கிற்கு பற்கள் இல்லை என்பதை உணர்ந்த அவர் தாம் திமிங்கலத்தின் வாயில் சிக்கிக் கொண்டதை புரிந்து கொண்டார்.

சுமார் 30முதல் 40 விநாடிகள் கும்மிருட்டில் அவர் திமிங்கலத்தின் வாயில் இருந்த பின், நீருக்கு வெளியே வந்த திமிங்கலம், தலையை அங்கும் இங்கும் அசைத்து அவரை வேகமாக உமிழ்ந்தது. உடலில் சிறிய சிராய்ப்புகளுடன் வந்து விழுந்த அவரை அருகிலிருந்த மீன்படகில் இருந்தவர்கள் மீட்டு முதலுதவி அளித்தனர்.திமிங்கலத்தின் வாயில் சிக்கி உயிருடன் திரும்பி விட்டேன் என்பதை நம்ப முடியவில்லை என அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

பக்கார்டின் அனுபவம் உண்மையாகத்தான் இருக்கும் என மசாசூட்ஸ் திமிங்கல கடல் ஆய்வு துறை இயக்குநர் ஜூக் ராபின்ஸ் (Jooke Robbins) தெரிவித்திருக்கிறார்.திமிங்கலங்களுக்கு மிகப்பெரிய வாய் உண்டு என்றாலும், மனிதர்களை விழுங்கும் அளவுக்கு அதன் தொண்டை பெரிது அல்ல எனவும் அவர் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button