திருமணத்திற்கு முன் கற்பை இழக்கக்கூடிய ஜாதக அமைப்பை உடையவர்கள் யார்?
அறிமுகம்
மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டது போல் ஜாதக கட்டம் இருக்கும். அதில் “ல” என இருக்கும் கட்டம் ஒருவரின் ஜென்ம லக்கினம் என்றும், சந்திரன் உள்ள கட்டத்தை, அவரின் ராசி எனவும் அழைப்பர்.
நீங்கள் துலாம் ராசி எனின் உங்கள் ராசி கட்டத்தை பார்க்கும் போது, துலாம் கட்டத்தில் “சந்திரன்” காணப்படும்.
மேலும் நீங்கள் உங்கள் ஜாதகத்தை அவதானிக்கும் பொதுபோது விருட்சிகத்தில் குரு இருந்தால், குருவானது லக்கினத்துக்கு 6ம் இடத்தில் உள்ளது என கூறப்படும். இலக்கினத்தை 1 என எடுத்து மணிக்கூடு முள் திசையில் எண்ண வேண்டும்.
மேலும் லக்கினத்துக்கு 5,9 ம் இடங்களை திரிகோணம் என்றும் 1,4,7,10 ஆகிய இடங்களை கேந்திரங்கள் என்றும் அழைப்பர். 6,8,12 ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் எனப்படும்.
குறித்த ராசிக்கட்டத்தில் கிரகங்கள் உச்சம்,ஆட்சி, நட்பு, பகை எனும் நிலையில் காணப்படலாம்.
பெண்கள் ஜாதகத்துக்கு மட்டுமே உள்ள சில சிறப்பு இயல்புகளையும் பொதுவான பலனையும் காண்போம்
ஒரு பெண்ணின் – அவளுடைய அழகை லக்கினத்தை வைத்து சொல்ல வேண்டும் .
அவளுடைய கற்பு பற்றி அறிய நான்காம் இடத்தை கொண்டு சொல்ல வேண்டும் .
அவளுடைய புத்திர பரிசீலனை செய்ய ஐந்தாம் இடத்தை கொண்டு சொல்லவேண்டும் .
அவள் அடையக்கூடிய சௌபாக்கியங்களை ஏழாம் இடத்தை கொண்டு சொல்ல வேண்டும் .
அவளுடைய மாங்கல்ய பலத்தை எட்டாம் இடத்தை கொண்டு சொல்ல வேண்டும் .
அவளுடைய புத்திர பாக்கியத்தை ஒன்பதாம் இடத்தை கொண்டு சொல்ல வேண்டும் .
குருவும் -சுக்கிரனும் லக்கினத்தையும் சந்திரனையும் பார்ப்பாரகளாயின் – அந்த பெண் இளம் வயதிலேயே திருமணம் ஆகி ,அவள் நல்ல சுகபோகங்களை அனுபவிப்பாள் .
சந்திரனும் -சுக்கிரனும் கூடி லக்கினத்தில் இருக்க -ஜாதகி மிக்க அழகுடன் இருக்க சுகம் உடையவளாகவும் இருப்பாள் .
சந்திரனும் புதனும் கூடி லக்கினத்தில இருக்க -ஜாதகி ஒரு பண்டிதையாக இருப்பாள் .
லக்கினம் முதலாக மூன்று வீடுகளில் சுபக்கிரகங்கள் இருந்தால் ,ஜாதகி அழகுடன் +செல்வம் + சுகம் உடையவளாக இருப்பாள் .
ஐந்துக்கு உடையவன் சுக்கிரனானால் -அவள் கணவன் ஒரு பெரிய இராஜ யோகவானாக இருப்பான் .
ஐந்துக்குடையவன் சனியானாலும் -கணவன் யோகாவானாக இருப்பான் .
ஐந்தாம் அதிபன் சுபக்கிரகமாகி ,ஒன்பதாம் இடம் அவனுக்கு நட்பு வீடாகவும் இருந்து ,அவன் அந்த ஒன்பதில் நிற்க ,ஒன்பதாம் அதிபன் பதினொன்றில் நின்றால் -ஜாதகியனது தந்தையின் செல்வம் அவளுக்கே வந்து சேரும் .
சனியும் -புதனும் ஏழில் நிற்க குருவுக்கு ஏழாம் வீடு சர ராசியே இருந்தால் – ஜாதகியின் கணவன் எந்நாளும் ஊர் பயணங்களிலேயே இருப்பான் ,
ஸ்திர ராசியானால் ஊரை விட்டு போக மாட்டான் ,உபய ராசி ஆனால் பாதி நாள் உள்ளூரிலும் பாதி நாள் வெளியூரிலும் இருப்பான் .
செவ்வாய் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் மிக கோபம் நிறைந்தவர்களாக இருப்பர்.உதாரணம்
சித்திரை,மிருகசிரீடம்,அவிட்டம்
ராகு நட்சத்திரம்,கேது நட்சத்திர பெண்கள் பிடிவாதம் நிறைந்தவர்கள்;
உதாரணம்;மகம்,திருவாதிரை,சுவாதி,சதயம்,மூலம்
சனி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள்.உற்சாகம் இன்றி குடும்பத்தாரோடு சந்தோசம் இல்லாமல் கூட்டு குடும்பத்தில் ஒன்றி வாழாமல் ,சோகமாக இருப்பர்
உதாரணம் ;பூசம்,அனுஷம்
ஆண்களிடம் நெருங்கி பழகி கெட்ட பெயர் வாங்கக்கூடிய,சாதரனமாக மனதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லாமல் பழகினாலும் கெட்ட பெயர் வருகிறது.
சுக்கிர நட்சத்திரங்களாகிய பூராடம்,பரணி நற்குணங்கள் யாருக்கு அமையும் என பார்க்கும்போது ஜென்ம லக்னத்தில் சுபக்கிரகங்கள் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், புதன், வளர்பிறைசந்திரன் போன்ற கிரகங்கள் அமையப் பெற்றாலும், சுபக்கிரகங்கள் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் நல்ல அறிவாற்றல், அழகான உடலமைப்பு, சிறந்த குண நலன்கள் போன்ற யாவும் சிறப்பாக அமையும்.
பாவக்கிரகங்ள் லக்னாதிபதியாக இருக்கும் பட்சத்தில் பலம் பெற்று சுபர் பார்வையுடனிருந்தால் கோபக்காரியாக இருந்தாலும் நல்ல குணவதியாக இருப்பாள்.
சனி, ராகு போன்ற பாவக் கிரகங்கள் லக்னத்தில் பகை பெற்று அமையப் பெற்றாலும் ஜென்ம லக்னத்தை பார்வை செய்தாலும் மிகுந்த கோபக்காரியாகவும், மற்றவர்களை அனுசரிக்கத் தெரியாதவளாகவும், அழகிற்குறைந்தவளாகவும் இருப்பாள்.
பெண்களின் ஜனன ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் 4ம் பாவமும், சந்திரனுக்கு 4ம் பாவமும் சாதகமாக அமையப் பெற்றால், அப்பெண் நல்ல குண நலன்களும், ஒழுக்கமும் அனைவரையும் அனுசரித்துச் செல்லும் பண்பும் கொண்டவளாக திகழ்வாள்.
குறிப்பாக சுபகிரகமான குருபகவான் ஜென்ம லக்னத்திற்கு 4ம் பாவத்தையும், சந்திரனுக்கு 4ம் பாவத்தையும் பார்வை செய்து, 4 ம் அதிபதியையும் பார்வை செய்வது மிகவும் சிறப்பாகும்.
இப்படிப்பட்ட அமைப்பு ஏற்பட்டால் பண்புள்ள பெண்ணாகவும் மற்றவர்களுக்கு முன் உதாரணமானவளாகவும் விளங்குவாள்.
ஜென்ம லக்னத்திற்கு 4 ம் வீட்டிலும், சந்திரனுக்கு 4ம் வீட்டிலும் சுபகிரகங்கள் அமைவது மிகச்சிறப்பு.
நவகிரகங்களில் சுபகிரகம் என வர்ணிக்கப்படக்கூடிய குரு, சுக்கிரன், வளர்பிறை சந்திரன் ஆகிய கிரகங்களும் மற்றும் சுபர் சேர்க்கை, சுபர் பார்வை பெற்ற புதனும் அமையப் பெற்றால், பண்புள்ள பெண்ணாகவும் நல்ல குணவதியாகவும் இருப்பாள்.
4ம் வீட்டில் குரு பகவான் அமையப் பெற்றால் தெய்வீக எண்ணம், மற்றவர்களை வழி நடத்தும் வல்லமை இருக்கும்.
சுக்கிரன் அமையப் பெற்றால் அழகான உடலமைப்பு, மற்றவர்களை வசீகரிக்கும் அழகு அமையும். இல்லற சுகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.
புதன் அமையப் பெற்றால் நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல், நல்ல பண்பு, அழகான உடலமைப்பு, குடும்பத்தை பாங்காக நடத்திச் செல்லும் நற்குணம் போன்ற யாவும் உண்டாகும்.
வளர்பிறை சந்திரன் அமையப் பெற்றால் பிறரை வசீகரிக்கும் அழகான உடலமைப்பு, கவர்ச்சி சிறந் நற்குணங்களை உடைய பெண்ணாக விளங்குவாள்.
4ம் இடம் கற்பு ஸ்தானம் என்பதால், பாவக்கிரகங்கள் அமையாமல் இருப்பது நல்லது.
4ம் இடமே பாவக் கிரகத்தின் வீடாக இருந்தால் அக்கிரகம் சொந்த வீட்டில் ஆட்சி பெற்று அமைவதால் கெடுதிகள் ஏற்படாது.
சூரியனும் புதனும் கூடி நின்றால் ,பிறர் மனத்தில் எண்ணுவதை ஊகித்து அறிந்து கொள்வதில் கெட்டிக்காரி ,சுகமான சரீரம் உடையவளாகவும் இருப்பாள் ,
இரண்டு ஐந்து க்கு உடையவர்கள் கேந்திரம் ஏறினால் ,வாகன வசதிகள் படித்தவளாய் இருப்பாள் ,
ஐந்துக்குடையவன் குரு உச்சமாகி இருந்தால் தன மனதுக்கு பிடித்த அழகிய மணாளனை அடைவாள்
பனிரெண்டாம் இடம் சர ராசியானால் – அயலூரில் கல்யாணம் நடக்கும் ,
பனிரெண்டாம் இடம்ஸ்திர ராசியானால் உள்ளுரில் கல்யாணம் நடக்கும்
பனிரெண்டாம் இடம் உபய ராசியானால் நெடுந்தூரத்தில் கல்யாணம் நடக்கும் ,
பனிரெண்டாம் அதிபன் சுபக்கிரகமாகி வலுப்பெற்று இருக்க மாடமாளிகையில் வாழ்வாள்.
ஜென்ம லக்கினத்தில் சந்திரன் இருந்தால் ,ஜாதகி அழகு உள்ளவளாக இருப்பாள்.,
ஏழாம் இடத்தில் சந்திரன் நின்றால் ,அவளுடைய கணவன் அழகனாக இருப்பான்.,
ஜென்ம லக்கினமும் சந்திர லக்கினமும் இரட்டை ராசி களாய் இருந்தால் ,ஜாதகி அழகு உடையவளாய் இருப்பாள்.,
ஜென்ம லக்கினத்தையும் -சந்திர லக்கினத்தையும் இந்த இரண்டு வீடுகளையும் சுபகிரகங்கள் பார்த்தால் அவள் ஆபரணங்களை அணிவாள் .,அதிரூபவதியாகவும் இருப்பாள்
ஜென்ம லக்கினமும் -சந்திர லக்கினமும் ஒற்றை ராசியாய் இருந்தால் ,ஜாதகி ஓர் ஆண் மகணை போன்ற தோற்றம் உடையவளாய் இருப்பாள்
ஜென்ம லக்கினமும் -சந்திர லக்கினமும் சுபக்கிரகங்கள் பார்க்க – அவள் நற்குலத்தில பிறந்தவளாகவும்,செல்வம் உடையவளாகவும் இருப்பாள்
அந்த ராசிகளில் பாபிகள் நின்றாலும் ,பார்த்தாலும் ,ஜாதகி பாப குணம் படைத்தவளாக இருப்பாள்
லக்கினத்தில் சந்திரனும் சுக்கிரனும் இருந்தால் ஜாதகி மிகவும் பெருமையோடு செளக்கியமாக வாழ்வாள்
சந்திரனும் புதனும் சேர்ந்தால் ,பல கலைகளில் வல்லவளாக இருப்பாள்
புதனும்-சுக்கிரனும் இருந்தால் ஞானியாகவும் ,இனிய சொற்களை பேசுபவளாகவும் ,பேரழகியாகவும் இருப்பாள்
மூன்றாம் இடத்தில் சுபக்கிரகங்கள் இருக்க ,அவள் குனசாலியாகவும்,சுகவாழ்வு படைத்த பாக்கியவதி ஆகவும் இருப்பாள் ,கருணை குணம் கொண்டவளாகவும் இருப்பாள்
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.