எதிரணி படுதோல்வியடையும் – விமல் வீரவன்ச
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் சஜித், ரணில் அணிகள் படுதோல்வியடையும் என மஹிந்த அணியின் விமல் வீரவன்ச கருத்து தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்த இரு அணிகளும் மொத்தமாகவே 30 ஆசனங்களுக்கும் மேல் பெறாது என தெரிவித்திருந்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இலகுவாகவே மாபெரும் வெற்றி பெறும் என எதிர்வு கூறினார்.
எதிர்க்கட்சிகள் தங்களுள்ளேயே பிரச்சினைகளை தீர்க்கமுடியாமல் தடுமாறுவதால் அது எமக்கு சாதகமாக அமையலாம் என மேலும் தெரிவித்திருந்தார்.