வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலை அதிகரிப்பா?
எரிவாயு நிறுவனங்களை நடத்திச் செல்வதாயின் வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 400 – 500 ரூபாவால் அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை எரிவாயு விலை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் குழு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் வர்த்தக அமைச்சில் நேற்று முன்தினம் திங்கள்கிழமை கூடியது.
அத்தோடு அமைச்சர்களான கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்த அமரவீர, டளஸ் அழகப்பெரும, உதயகம்மன்பில மற்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண ஆகியோர் குறித்த குழுவில் அங்கம் வகிப்பதோடு இரு எரிவாயு நிறுவனங்களின் பிரதானிகளும் அதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையினால் உள்நாட்டில் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டுமென எரிவாயு நிறுவனங்களின் பிரதானிகள் சுட்டிக்காட்டியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் எவ்வாறாயினும் சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிப்பது குறித்த தீர்மானம் எதுவும் இதன்போது மேற்கொள்ளப்படவில்லை.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.