செப்டெம்பரில் பாடசாலைகள் திறக்கப்படுமா? – கல்வியமைச்சர் விளக்கம்!
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது நிச்சயமற்றதாகும் என கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதார தரப்பினரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களுக்கு அமையவும், மேலும் சில திட்டங்களுடனும், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு, முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் மாதம் இறுதிக்கு முன்னதாக, அனைத்து ஆசிரியர்களுக்கும், பாடசாலை கல்விசாரா ஊழியர்களுக்கும், இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி ஏற்றம் நிறைவடைந்த பின்னர், செப்டெம்பர் மாத முதல் வாரத்திலிருந்து, கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள திறப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்த்திருந்தது.
எனினும், தற்போதைய சூழ்நிலையில், செப்டெம்பர் மாதம் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீள திறக்க முடியுமா? என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சூழ்நிலையில், முறைப்படுத்தப்பட்ட இணையவழி கற்பித்தல் முறைமை முக்கியமானதாகும்.
இந்த நிலையில், ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் முறைமையில் இருந்து விலகி யாரை பழிவாங்குகின்றனர் என்றும் கல்வி அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.