புகை பிடிப்பவர்களுக்கு,WHO -வின் அபாய எச்சரிக்கை!
புகை பிடிப்பவர்களுக்கு, கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் இறப்பும் 50 சதவிகிதம் அளவுக்கு கூடுதலாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதாநாம் கெப்ரிசியஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புகைப்பதை விடுவோம் என்ற WHO பிரச்சாரத்தை ஒட்டி வெளியிட்ட அறிக்கையில், புகை பிடிப்பவர்களுக்கு, கொரோனாவால் கேன்சர்,இதய நோய் மற்றும் சுவாச நோய்கள் அதிக அளவில் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே கொரோனா ஆபத்தை குறைக்கவும், இந்த நோய்களில் இருந்து விடுபடவும் புகைபிடிப்பதை கைவிடுவதே ஒரே வழி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புகை பிடிப்பதை கைவிடுவதற்கான WHO -வின் பிரச்சார இயக்கத்தில் சேர்ந்து பங்களிக்குமாறு அவர் உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.