திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கையை ஏற்க செய்ய வாட்ஸ்ஆப் தந்திரமா?
திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கைகளை சுமத்த,தனது பயனர்களிடம் இருந்து தந்திரமாக ஒப்புதலை பெறும் நடவடிக்கைகளில் வாட்ஸ்ஆப் இறங்கி உள்ளது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அரசின் புதிய டிஜிட்டல் கொள்கைகளை ஏற்பது தொடர்பாக நடக்கும் வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதோ ஒரு சட்டமாக மாறுவதற்கு முன்னர், திருத்தப்பட்ட தனியுரிமை கொள்கைகளை ஏற்குமாறு வாட்ஸ்ஆப் தனது பயனர்களை கட்டாயப்படுத்தக்கூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக புஷ் நோட்டிபிகேஷன்களை பயன்படுத்துவதில் இருந்து வாட்ஸ்ஆப்பை தடுக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. தனது தனியுரிமை கொள்கை குறித்து வாட்ஸ்ஆப் தினமும் அறிவிப்பு வழங்குவதாகவும்,அது இந்திய காம்பெட்டிஷன் கமிஷனின் உத்தரவுக்கு எதிரானது என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.