
சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை!
சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் குழந்தை வைத்தியர் பேராசிரியர் குவனி லியனகே தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
முகக் கவசம் அணிவதைப் போன்று இரு கைகளையும் கழுவி சுத்தம் செய்வதற்கும் அதேபோன்று கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் பெற்றோர்களின் கண்காணிப்பின் கீழ் சிறுவர்களுக்கு முகக்கவசம் அணிவதில் எந்த பிரச்சினையும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.