
முடிப்பிளவுகளை தடுக்கும் வழிகள்!!
கூந்தலை டிரிம் செய்யுங்கள். கூந்தலின் அடிப்பகுதியான நுனி பிளவு படுவது சகஜம். ஆனால் முடிப்பிளவு இருந்தால், முடி வளர்வது பாதிக்கப் படும். ஆதலால் நான்கு மாதத்திற்கு ஒருமுறை டிரிம் செய்து கொள்வது அவசியம். லீவ் இன் (leave in) கண்டிஷனர் என்று சொல்லக் கூடிய கூந்தல்சீரத்தைத் தொடர்ந்து பயன்படுத் துகையில், பிளவுகள் ஏற்படாது.
மசித்த பப்பாளி பழத்துடன் 2 ஸ்பூன் தயிர் கலந்து, தலை மற்றும் கூந்தலில் தடவி ஷவர் தொப்பி போட்டுக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவால் அலசுங்கள். வைட்டமின் இ மாத்திரைகள் வைட்டமின் இ எண்ணெய் நிறைந்த மாத்திரைகளை இளஞ்சூடான நீரில் போட்டு, அதை கரைத்து பிளவுகள் ஏற்பட்ட அடி முடியில் தடவிவர, பிளவுகள் வராது.
எண்ணெய் கலவை மாஸ்க்பாதாம் மற்றும் தேங்காய் எண்ணெயை சமஅளவில் கலந்து, நுனிமுடியில் தடவிக்கொள்வதால் பிளவுகள் ஏற்படாது. வாரம் இருமுறை செம்பருத்தி, சீயக்காய், பயத்தம் பருப்பு இவற்றைக் சேர்த்து அரைத்த சீயக்காய் பயன்படுத்தி, எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை வழக்கமாகக் கொள்ளவேண்டும்.
தலையில் எண்ணெய் தடவி, ஷாம்பூவால் அலசும் பழக்கம்தான் இன்று பலரிடமும். இதனால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்கான பலனே இல்லாமல் போய்விடும். தலையில் எண்ணெய் தேய்த்து 10 நிமிடங்கள் நன்றாக ஊறினால்தான், எண்ணெய் சருமத்தினுள் பாய்ந்து, உடலைக் குளிர்ச்சியாக்கும். வடித்த கஞ்சியில் அரைத்த சீயக்காயைப் போட்டு கலந்து குளிக்கலாம். இதன் மூலம் தலையின் ஸ்கால்ப் பகுதியும் வறட்சியாகாமல் இருக்கும்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.