fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

மட்டக்களப்பில் தோண்டி எடுக்கப்பட்டது புதைக்கப்பட்ட விதுஷனின் உடலம்!

கடந்த 3ம் திகதி சந்திரன் விதுஷன் எனும் இளைஞன் ஐஸ் போதை பொருள் வியாபாரம் செய்வதாக இரவு பொலிஸாரால் கைது செய்யப் பட்ட நிலையில் மறுநாள் காலை சடலமாக மீட்கப் பட்டு இருந்தார்.

இந்நிலையில் இளைஞனின் மரணத்தில் சந்தேக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து இன்று பகல் சுமார் 2 மணியாளவில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் கல்லியங்காடு கிருஸ் தவ மயானத்தில் கடந்த 4ம் திகதி புதைக்ப்பட்ட விதுஷனின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சந்திரன் விதுஷனின் தங்கை தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன்என்று தெரிவித்திருந்தார் .

அத்துடன் எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு’இவர்க்ளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது . மருத்துவ உடல் கூற்று அறிக்கையில் எனக்கு சந்தேகம் உள்ளது எனவே அதற்கான சரியான நீதி கிடைக்க வேண்டும் கைவிலங்கிட்ட எனது அண்ணன் ஐஸ் போதைப்பொருட்களை எவ்வாறு விழுங்குவான் என அவர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த நிலையில் 18 ம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிபதி அறையில் நீதிபதி ஏ.சி.றிஸ்வான் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பொலி ஸ் காவலில் இருந்த பொழுது உயிரிழந்த சந்திரன் விதுஷன் மரணம் தொடர்பாக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி சுகாஷ் ஆஜராகி இருந்தார் . குறித்த வழக்கு தொடர்பாக அவர் தெரிவிக்கையில் விதுஷனின் மரண பரிசோதனை அறிக்கையில் நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அவர்கள் சார்பில் மேற்கொண்ட விண்ணப்பத்தை அடுத்து மாண்புமிகு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றினை எங்களுக்கு வழங்கியிருக்கின்றது.

புதைக்கப்பட்ட விதுஷசனின் உடலை மீண்டும் 21ம் திகதி திங்கள் கிழமை தோண்டி எடுத்து இலங்கையிலேயே இத் துறையில் மிகவும் நிபுணத்துவம் வாய்ந்த பேராதனைப் பல்கலைக்கழகத்தின் னுடைய பேராசிரியர் முன்னிலையில் மீளவும் பிண பரிசோதனை மேற்கொள்ள மாண்புமிகு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது .

இந்த குடும்பத்துக்கு சட்டத்துறை ஊடாக அதிஉச்ச உதவியை வழங்கியதில் நான் பெருமையடைகின்றேன் இதனூடாக பேராசிரியர் உடைய சிவார்சுகள் பிரதானமாக எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். எனினும் ஜஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்ட இளைஞன் போதைப் பொருளை விழுங்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்திருந்தனர் . இந்த நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நீதவான் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்ட்ட அதேவேளை வாழைச்சேனை பொலிஸ் பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த தலைமையில் விசேட பொலிஸ்குழு அமைக்கப்பட்டு விசாணை இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் 4ம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் உயிரிழந்த இளைஞர் போதைப் பொருளை வாயில் போட்டு விழுங்கிய நிலையில் அது நெஞ்சுப் பகுதியில் வெடித்ததில் நுரையீரல் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்து என பொலிசார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button