அதிரும் பிரேசில் – ஒரே நாளில் 77,898 பேருக்கு கொரோனா பாதிப்பு!
பிரேசில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.65 லட்சத்தைக் கடந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இந்நிலையில், பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 77,898 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 1.66 கோடியைத் தாண்டியுள்ளது.
பிரேசிலில் ஒரே நாளில் 2,346-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 4.65 லட்சத்தைக் கடந்துள்ளது.
பிரேசிலில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 1.50 கோடி பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 10.91 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.