வாட்ஸ்ஆப் Vs வைபர் – ஒப்பீடு
இன்றைய உலகில் மெசேஜ் அனுப்புவது என்பது பல பரிணாமங்களைக் கடந்து பலவிதமான புது அனுபவங்களைத் தந்து கொண்டிருக்கின்றது. கிட்டத்தட்ட ஒரு ஈமெயில் அனுப்புவதற்க்குப் பதிலாக ஒரு மெசேஜ் அப்பில் சகலவிதமான விடயங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. தற்போது பிரபலமாகவுள்ள மெசேஜ் அப் தொடர்பான முக்கிய விடயங்களை கீழே காணலாம். அதன் அடிப்படையில் உங்கள் தேவை, வசதி கருதி எது முக்கியமோ அதை தெரிவு செய்யலாம்.
விளம்பரங்கள்
வைபருடன் ஒப்பிடும் போது வட்ஸ் அப்பில் தேவையற்ற விளம்பரங்கள் வராது. நீங்கள் வட்ஸ் அப் பாவிக்கும் போது எவ்வித இடையூறுகளும் இல்லாமல் தன்னியக்க விளம்பரங்கள் தோன்றாத வண்ணம் பாவிக்கமுடியும். வைபரில் அதிக விளம்பரங்கள் வருவதை தடுத்தல் கடினம்.
உருமாற்றம்
வட்ஸ் அப்பை நீங்கள் விரும்பியவாறு உருமாற்றம் செய்யமுடியும், உங்களுக்கு விரும்பிய கலரில்,டிசைனில் அதை மாற்றி வைத்துக்கொள்ளலாம்.ஆனால் வைபரில் அந்த வசதியில்லை.
டப்லெட் வேர்ஷன்
வைபரை நாம் எங்கும் இன்ஸ்டோல் செய்து கொள்ளமுடியும். குறிப்பாக டப்பில் பாவிக்க முற்படும்போது வைபர் நாம் பாவிக்கும் டப்பின் அளவிற்கேற்ப தோற்றமளிக்கும். இலகுவாக பாவிக்க முடியும். ஆனால் வட்ஸ் அப் எல்லா டப்பிற்கும் பொருந்தாது.
பாவனையாளர்கள்
கூகுள் பிளே ஸ்டோரில் அதிக பாவனையாளர்களால் தரவிறக்கம் செய்யப்பட்ட மெசேஜ் அப், வைபராகும். அப்பிள் ஸ்டோரிலும் அதே நிலைமையே காணப்படுகின்றது.
தொடர்புகள்
வட்ஸ் அப்பில் நீங்கள் ஒருவருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமாயின் முதலில் அவரை அட் செய்து கொள்ளவேண்டும். பின்னர் அவர் உங்களை அனுமதித்தால் மட்டுமே மேலதிகமாக மெசெஜ் அனுப்பலாம்.
இது பழக்கமற்றவர்களின் தேவையற்ற மெசேஜ்களை தவிர்த்துக்கொள்ளலாம்.வைபரில் இவ்வசதி இல்லை.
மெசேஜிங்
வைபரில் நீங்கள் மெசேஜ் ரைப் பண்ணும் போது நீங்கள் தொடர்பில் இருக்கும் மற்றவருக்கு அது காட்டாது. ஆனால் வட்ஸ் அப்பில் அது காட்டும்.
வைபரில் நீங்கள் கடைசியாக அக்டிவாக இருந்த நேரம் காட்டாது,ஆனால் வட்ஸ் அப்பில் அது தென்படும்.
குறிப்பிட்ட சில மணிநேரங்களுக்கு உங்கள் நோட்டிவிக்கேசனை வட்ஸ் அப்பில் நிறுத்த முடியும். ஆனால் வைபரில் அந்த வசதியில்லை.
வைபர் அப் இல்லாதவர்களுக்குக்கூட நீங்கள் இலவசமாக மெசேஜ் அனுப்ப முடியும்,வட்ஸ் அப்பில் அவ்வாறு அனுப்ப முடியாது.
ஷேர் பண்ணக்கூடியவை
வட்ஸ் அப்பில் நீங்கள் பாட்டுக்கள்,இசைத்துணுக்குகள் அனுப்பலாம், வைபரில் அனுப்ப முடியாது.
கணக்கு உருவாக்கம்
நீங்கள் வைபரை உருவாக்கும் போது உங்கள் முகப்புத்தக கணக்கைக் கொண்டு இலகுவாக உருவாக்கலாம்,வட்ஸ் அப்பில் நீங்கள் உரிய முறையில் முழுவிடயங்களையும் பதிவு செய்யவேண்டும்.
வட்ஸ் அப்பில் உங்கள் தனிப்பட்ட விடயங்களை மற்றவர் பார்வையிலிருந்து மறைக்க முடியும்.ஆனால் அவ்வசதி வைபரில் இல்லை.
ஆகவே இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, வைபர் அனைவராலும் பாவிக்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக கீழ்காணும் விடயங்கள் அதை உறுதிப்படுத்துகின்றன.
- தற்காலிகமாக மேசேஜ் அனுப்பும் வசதியுள்ளது.
- இலவசமாக மெசேஜ் அனுப்பலாம்.
- கூகுள் பிளே ஸ்டோரில் முதன்மை வகிக்கும் செயலியாகவுள்ளது.
- டப்லெட் வேர்சனிலும் உள்ளது.
- ஏனைய அப்களைப் பாவிப்பவரைக்கூட தொடர்புகொள்ளலாம்.
- ஓவ் லைனில் இருக்கும் போதும் மேசேஜ் கிடைக்கும்.
- பேஸ்புக் மூலம் கணக்கு உருவாக்க முடியும்.