
வவுனியாவில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
வவுனியா(Vavuniya)- மகாறம்பைக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் இன்று(16) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
26 வயதுடைய தனுசன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தவறான முடிவெடுத்தே அவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.