
185,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு!
இலங்கைக்கு ரஷ்யாவிடமிருந்து 185,000 ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளன.
அடுத்த செவ்வாய்கிழமை இவை இலங்கைக்கு கிடைக்கும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து 6 இலட்சம் ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.
அதன்படி முதற்கட்டமாக 15,000 ஸ்புட்னிக் வீ தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற நிலையில், அவற்றை செலுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்தநிலையில் அடுத்தக்கட்டமாக இலங்கைக்கு 185,000 தடுப்பூசிகள் அடுத்தவாரம் கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.