தொற்றல்லா நோயாளர்கள் உடனடியாக தடுப்பூசி பெற வலியுறுத்தல்..
இலங்கையில் டெல்டா திரிபு பரவ ஆரம்பித்துள்ளது.
இதுவரையில் 19 பேர் இந்த திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் தொற்றல்லா நோய்களான நீரிழிவு, இருதய கோளாறு, நீண்டகால சுவாசக்கோளாறு, சிறுநீரகத்தொகுதி கோளாறு போன்ற நோய்களை உடையவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.
அவர்கள் உடனடியாக தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
இதற்காக தாங்கள் சிகிச்சை பெறுகின்ற நோய்க்கான ஆதாரத்துடன், பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச்சுகாதார அதிகாரியை நாடுவதன் ஊடாக, தடுப்பூசியைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் கொவிட் தொற்று தொடர்பான இணைப்பாளர் வைத்திய அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.