அறிகுறிகளை காட்டாத கருப்பை புற்றுநோய்!
மார்பக புற்றுநோய் போல பெண்களுக்கு மற்றொரு அச்சுறுத்தல் இந்த கருப்பை புற்றுநோய். மார்பக புற்றுநோயை அடுத்து கருப்பை புற்றுநோயும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கருப்பை புற்றுநோய் பாதிக்கும் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கருப்பை புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், கருமுட்டையில் இருந்து உருவாகும் புற்றுநோய் என மூன்று விதமான புற்றுநோய் கருப்பையை பாதிக்க வாய்ப்புள்ளது.
இதில் கருப்பை வாய் புற்றுநோய் நகர்புற பெண்களை விட, கிராமப்புற பெண்களை தான் அதிகம் தாக்குகிறது. இந்தியாவில் 8 நிமிடங்களுக்கு ஒருமுறை கருப்பை வாய் புற்றுநோயால் ஒரு பெண் உயிரிழப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு 2.80 லட்சம் பெண்கள் உயிரிழக்கின்றனர். பெண்களின் பிறப்புறுப்பில் இருந்து கருப்பைக்கு செல்லும் பாதையில் செல்களின் வளர்ச்சி அளவுக்கு அதிகமாக இருக்கும் போது அது புற்றுநோயாக மாறுகிறது.
இந்த கருப்பை புற்றுநோய் பெரிய அறிகுறிகளை காட்டாது. அதனால் தான் உயிரிழப்புகள் அதிகமாகிறது. மார்பக புற்றுநோய் போல தான் கருப்பை புற்றுநோயையும் ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்திவிடலாம். பிறப்புறுப்பை சுத்தமாக வைத்திருக்காமல் இருந்தாலும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோல மாதவிடாய் காலத்திலும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். 4 மணி நேரத்துக்கு ஒருமுறை சானிட்டரி நாப்கின்னை மாற்ற வேண்டும். துணி பயன்படுத்துவது கருப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பாக அமைந்துவிடும்.
பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் தொடங்கியது முதலே பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்வது குறித்து தாய்மார்கள் கற்றுத்தர வேண்டும். இந்த விஷயங்களை எல்லாம் கூச்சப்பட்டு பேசாமல் தவிர்க்கக் கூடாது. சிறுநீர் கழித்ததும் உடனே பிறப்புறுப்பை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும். மாதவிடாய் காலத்திலும் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஆரம்ப கட்ட பாதுகாப்பு வழிகளை பின்பற்றினால் ஓரளவுக்கு புற்றுநோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.