அனுமதியின்றி இயங்கிய களஞ்சியசாலை முற்றுகை: 4, 100 டன் சீனி மீட்கப்பட்டது!
வத்தளை – கெரவலப்பிட்டிய பகுதியில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 4,100 மென்றிக் டன் சீனி மீட்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள் இன்று (30) முன்னெடுத்த சுற்றிவளைப்பின்போது, இவை மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், குறித்த களஞ்சியசாலை நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி முன்னெடுத்து சென்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தைகளில் சீனியின் விலை அதிகரித்துள்ள நிலையில் சீனி இறக்குமதியாளர்கள் உள்ளிட்ட தரப்பினர் சீனியை பதுக்குவதாக வர்த்தக அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதற்கமைய நுகர்வோர் அதிகார சபையினால் இந்த சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.