fbpx
Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.

இரண்டு திருமணம் செய்யும் யோக அமைப்பு உள்ளவர்கள் யார்?

பொதுவாக யோகங்கள் என்பதன் அடிப்படை புரிந்திருந்தாலும் அது எம்முடைய ஜாதகத்தில் உள்ளதா என எமக்கு பார்க்க தெரிந்திருக்காது. இந்த பதிவில் உங்கள் ஜாதகத்தை அவதானித்து,குறித்த யோகங்கள் இருக்கின்றதா என நீங்களே பார்ப்பதற்க்குரிய வழிகாட்டல்களை தருகின்றோம்.

மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டது போல் ஜாதக கட்டம் இருக்கும். அதில் “ல” என இருக்கும் கட்டம் ஒருவரின் ஜென்ம லக்கினம் என்றும், சந்திரன் உள்ள கட்டத்தை, அவரின் ராசி எனவும் அழைப்பர்.

நீங்கள் துலாம் ராசி எனின் உங்கள் ராசி கட்டத்தை பார்க்கும் போது, துலாம் கட்டத்தில் “சந்திரன்” காணப்படும்.

மேலும் நீங்கள் உங்கள் ஜாதகத்தை அவதானிக்கும் பொதுபோது விருட்சிகத்தில் குரு இருந்தால், குருவானது லக்கினத்துக்கு 6ம் இடத்தில் உள்ளது என கூறப்படும். இலக்கினத்தை 1 என எடுத்து மணிக்கூடு முள் திசையில் எண்ண வேண்டும்.

மேலும் லக்கினத்துக்கு 5,9 ம் இடங்களை திரிகோணம் என்றும் 1,4,7,10 ஆகிய இடங்களை கேந்திரங்கள் என்றும் அழைப்பர். 6,8,12 ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் எனப்படும்.

குறித்த ராசிக்கட்டத்தில் கிரகங்கள் உச்சம்,ஆட்சி, நட்பு, பகை எனும் நிலையில் காணப்படலாம்.

தற்போது முக்கியமாக உள்ள ஒரு யோகத்தை பற்றி பார்ப்போம். அது உங்கள் ஜாதகத்தில் இருக்கின்றதா என பாருங்கள்.

இரு தார யோகம்

இந்த யோக அமைப்பு பெற்றவர்கள் மனைவியை தவிர வேறு பெண்களுடன் தொடர்பில் இருப்பர். இதே அமைப்பு பெண்களுக்கும் பொருந்தும்.

ஒரு ஜாதகத்தில் சுக்கிரனோடு 1 கிரகம் சேர்ந்து அமைந்திருந்தால் வேறு பெண்ணுடன் ஏற்படும். சுக்கிரனோடு 2 கிரகங்கள் சேர்ந்திருந்தால் மனைவியை தவிர 2 பெண்களுடன் தொடர்பு ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகின்றது.

இன்னுமொரு யோக அமைப்பை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

இது தொடர்பில் சந்தேகம் இருந்தால் கீழே கமெண்ட் பாக்ஸில் உங்கள் கேள்விகளை கேட்கலாம்.

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வைபர் கம்யூனிட்டியுடன் இணையுங்கள்

எமது செய்திகளை உடனடியாக பெற்றுக்கொள்ள எமது வாட்ஸ்ஆப் குழுவுடன் இணையுங்கள்

இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.

Back to top button