யாழ்.போதனா வைத்தியசாலையில் இரு கொரோனா சிகிச்சை விடுதிகளும் நிரம்பிவிட்டது!
யாழ்.போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான இரு விடுதிகளும் நிரம்பியிருப்பதாக கூறியிருக்கும் போதனா வைத்தியசாலை பதில் பணப்பாளர், வைத்திய கலாநிதி ஸ்ரீபவானந்தராஜா,
போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்டதாக கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான அவசர சிகிச்சை பிரிவு தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.
இது குறித்து மேலும் அவர் கூறியுள்ளதாவது, யாழ்.போதனா வைத்தியசாலையின் இரு விடுதிகளை கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான விடுதியாக மாற்றியமைக்கப்பட்ட நிலையில் இரு விடுதிகளிலும்
நோயாளர்கள் நிரம்பியிருப்பதாக கூறியுள்ள பணிப்பாளர், மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும். என கேட்டிருக்கின்றார். மேலும் போதனா வைத்தியசாலையில் புதிதாக 10 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
அங்கும் 5 நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மீதமாக 5 படுக்கைகளே உள்ளதெனவும் பதில் பணிப்பாளர் கூறியுள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.