ட்விட்டரின் புதிய அப்டேட்: இனி ஒரு ட்வீட்டை 20 நபர்களுக்கு சேர் செய்யலாம்!
சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் ட்விட்டரில், பயனர்கள் இனி ஒரு ட்வீட்டை 20 நபர்களுக்கு ஒரே சமயத்தில் டிஎம்-மில் (DM) பகிரலாம் என்ற புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று அறிவித்தது ட்விட்டர் நிறுவனம்.
டிவிட்டரில் பொதுவாக ஒரு ட்வீட்டை பலருக்கு தனியாக பகிரும் போது தவறுதலாக குழுக்களிலும் அது பகிரப்படுகிறது. இப்போது அந்த பிரச்சனைகளை இல்லாமல் தடுக்க ஒரே ட்வீட்டை 20 வெவ்வேறு நபர்களின் டிஎம் (DM) மிற்கு பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது டிவிட்டர் நிறுவனம். இந்த புதிய அப்டேட் ஐஓஎஸ் (IOS) மற்றும் கணினிகளில் (System) ட்விட்டர் பயன்படுத்துவதற்கு முதலில் வருகிறது. ஆண்ட்ராய்டில் (Android) டிவிட்டர் பயன்படுத்துவதற்கு இந்த வசதி கொஞ்சம் தாமதமாக வரும் என்று தெரிவித்துள்ளது.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.