சந்தா சேவையாக மாறும் Twitter; பயனர்கள் ஷாக்!
ஒரு கட்டத்துக்கு மேல… இன்னைக்கு இலவசமா கிடைக்கிற சோஷியல் மீடியா பிளாட்பாரம் எல்லாமே… பே சர்வீஸாக அதாவது சந்தா சேவையாக மாறும் என்கிற எண்ணம்… இனிமேலும் வெறும் எண்ணமாகவே இருக்காது.
ஹைலைட்ஸ்:
- Twitter-இன் சந்தா சேவை பற்றிய தகவல் வெளியானது
- அது தற்காலிகமாக Twittter Blue என்று அழைக்கப்படுகிறது
- மாதத்திற்கு ரூ.269 என்கிற கட்டணம் வசூலிக்கப்படும்
சந்தா சேவையை தொடங்குவதை ட்விட்டர் தற்செயலாக உறுதிப்படுத்தியதாக தெரிகிறது. வெளியான தகவலின்படி, தற்காலிகமாக “ட்விட்டர் ப்ளூ” என்று அழைக்கப்படும் இந்த ட்விட்டர் சந்தா சேவையானது பயனர்களிடம் மாதத்திற்கு 2.99 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கும்.
மேலும் வெளியான அறிக்கையின்படி, ட்விட்டர் ப்ளூவுக்கான இன்-ஆப் பர்சேஸ் ட்விட்டரின் ஆப் ஸ்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், இது அதிகாரப்பூர்வமாக பயனர்களுக்கு வெளியிடப்படவில்லை.
கூறப்படும் சந்தா சேவையானது முதலில் அமெரிக்க பயனர்களுக்கு ஒரு மாதத்திற்கு 2.99 டாலர்களுக்கு வழங்கப்படும் என்றும், அதே சேவை இந்தியாவில் ரூ.269 க்கு அணுக கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த ட்விட்டர் அப்பேட்டை முதலில் கண்டறிந்த பாதுகாப்பு ஆய்வாளர் ஜேன் மஞ்சுன் வோங், “ட்விட்டர் தளம் ட்விட்டர் ப்ளூ-வை உறுதிப்படுத்துகிறது, ஆப் ஸ்டோரில் இதுபோன்ற இன்-ஆப் பர்சேஸை பகிரங்கமாக சேர்ப்பதன் மூலம் மாதத்திற்கு 2.99 அமெரிக்க டாலர்கள் செலவாகும். சோதனைக்காக, முதலில் பணம் செலுத்தும் ட்விட்டர் ப்ளூ வாடிக்கையாளராக நான் மாறிவிட்டேன். ட்விட்டர் ப்ளூ ஆனது கலர் தீம்ஸ் மற்றும் கஸ்டம் ஆப் ஜகான்களுடன் வருகிறது. ரீடர் மோட் விரைவில் வரும்” என்று ட்வீட் செய்ததோடு, அது சார்ந்த ஸ்கிரீன் ஷாட்டையும் மஞ்சுன் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் ப்ளூ சந்தாவானது பயனர்களை ஆப் ஐகானின் நிறத்தை மாற்ற அனுமதிக்கும். அதாவது மெனுவில் பல்வேறு வண்ண விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இதேபோல், பயனர்கள் Colour Theme-ஐ நீலத்திலிருந்து இளஞ்சிவப்பு, பச்சை, சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் பலவற்றிற்கு மாற்றலாம்.
Colour pallet-களை தவிர, இந்த ட்விட்டர் சந்தா சேவையில் “அன்டூ ட்வீட்” அம்சமும் “ரீடர் மோட்” போன்ற அம்சங்களும் அணுக கிடைக்கும்.
அன்டூ ட்வீட் அம்சமானது மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் ஒன்றாகும். அதே நேரத்தில் ரீடர் மோட் ஆனது நீண்ட நேரம் “படிக்கும்” பயனர்களுக்கு கைகொடுக்கும்.
ஆனால் ட்விட்டர் வழங்கும் இந்த சிறிய ஆடம்பரங்கள் அனைத்தும் ஒரு விலையுடன் வருகிறது. ட்விட்டர் ப்ளூ மாத சந்தாவின் விலை 2.99 அமெரிக்க டாலர்களுக்கு (தோராயமாக ரூ .200) வருகிறது.
டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவும் குறிப்பிட்ட இன்-ஆப் பர்ச்சேஸை இந்தியாவில் பார்த்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சேவைகளின் விலை இந்தியாவில் ரூ.269 ஆக இருக்கும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
இந்த பதிவை பலர் பயனடையும் பொருட்டு கீழே உள்ள பேஸ்புக், மெசேன்ஜர், வைபர் ,வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற சமுக வலைத்தள இணைப்பை அழுத்தி நண்பர்களுடனோ /நீங்கள் அங்கத்தவராயுள்ள குழுக்களுடனோ பகிர்ந்துகொள்ளுங்கள்.